டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து முழுமையாக வெளியேற்றப்படும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக் நாட்டுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்காக தனது படையை அனுப்பி இருந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஈராக் ராணுவம் அமெரிக்க படைகளின் உதவியுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் வெளியானது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து முடிவுக்கு வராததால் அமெரிக்க படைகள் ஈராக் நாட்டில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக ஈராக், அமெரிக்கா தனது படைகளை மீண்டும் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் ஜனாதிபதி ஜோ பைடனை அமெரிக்கா சென்றிருந்த ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காமிதி வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பில் இருவரும் அமெரிக்க போர் நடவடிக்கையை ஈராக்கில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த ஆண்டில் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து முழுவதுமாக வெளியேற்றப்படும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார். அதேசமயம் ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க படைகளின் எண்ணிக்கை டிசம்பருக்கு முன்பாக ஈராக்கில் குறைக்கப்படுமா என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்க வீரர்கள் 2500 பேர் ஈராக்கில் உள்ளனர்.