தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இதனால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிரான அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி இபிஎஸ் ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பெட்ரோல் விலையை ஏன் குறைக்கவில்லை? நீட் தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை? உள்ளிட்ட வாக்குகளை கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.