Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி, ஹன்சிகா இணையும் புதிய படம்…. ரசிகர்கள் எதிர்பார்ப்பு….!!!

விஜய் ஆண்டனியும், ஹன்சிகாவும் முதல் முறையாக இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பாடல்கள் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது கோடியில் ஒருவன், பிச்சைக்காரன்2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்க உள்ளார்.

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிரபல நடிகை ஹன்சிகா நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. நடிகை ஹன்சிகாவிடம் தற்போது கால்ஷீட் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே விஜய் ஆண்டனியும், ஹன்சிகாவும் முதல் முறையாக இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |