Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பண்டைய கால பயன்பாடு… மோதிரம் வளையல் துண்டுகள்… அகழ்வாராய்ச்சியாளரின் எதிர்பார்ப்பு…!!

அகழ்வாய்வு பணியின்போது பண்டைய காலத்தில் மக்கள் பயன்படுத்திய மோதிரம் மற்றும் வளையல் துண்டுகள் இருப்பது தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொற்கை பகுதியில் அரசின் சார்பில் தற்போது அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றது. இங்கு தொல்லியல் துறை அதிகாரிகளால் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய தாழிகள், பானைகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் ஆகியவற்றைக் கண்டு பிடித்துள்ளனர். இந்நிலையில் கொற்கையில் தொல்லியல் துறை அதிகாரிகளால் அகழாய்வு பணிக்காக 17 குழிகள் தோண்டப்பட்டு உள்ளது.

அதில் ஒரு குழியில் சங்கு அறுக்கும் தொழிற்சாலை இருந்ததும், 10 அடுக்கு உள்ள செங்கல் கட்டுமானம் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மற்றொரு குழியில் திரவுப் பொருட்களை வடிகட்டும் 9 அடுக்கு உள்ள வடிகுழாய் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மற்றொரு குழாய் உடையாத மண்பானை மற்றும் மூன்று சங்குகளையும்  கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு குழியில் பழங்காலத்தில் வசித்த மக்கள் பயன்படுத்திய சங்கு மோதிரம், கண்ணாடி வளையல் துண்டுகள் போன்றவைகள் இருப்பதை தொல்லியல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அங்கு தோண்டத் தோண்ட பொருட்கள் கிடைப்பதால் தொல்லியல் துறை அதிகாரிகள் அதிக ஆர்வமுடன் இன்னும் பல பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என தீவிரமாக பணியில் செயல்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |