Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த மஞ்சள் இவ்வளவு ரூபாயா…? போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்… மும்முரமாக நடைபெற்ற ஏலம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் வியாபாரிகள் போட்டிபோட்டு மஞ்சளை வாங்கி சென்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க வளாகத்தில் வைத்து மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று போட்டிபோட்டு மஞ்சளை ஏலத்தில் எடுத்து சென்றுள்ளனர்.

அதன்படி விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 7,569 அதிகபட்ச விலையாக 8,469 க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உருண்டை ரக மஞ்சள் அதிகபட்ச விலையாக 7,302 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 6,579 ரூபாய்க்கும், பனங்காலி ரக மஞ்சள் ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 13,889 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 18,369 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மொத்தமாக 1,950 மூட்டை மஞ்சள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 86 லட்சம் ஆகும்.

Categories

Tech |