அமெரிகாவில் புழுதிப் புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி 8பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உட்டா மாகாணம் கனோஸ் நகர நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் தொடர்ந்து வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே திடீரென பலத்த புழுதி காற்று வீச தொடங்கியது.
இதனால் வாகன ஓட்டுநர்களின் கண்களில் தூசி விழுந்ததால் முன் செல்லும் வாகனங்கள் தெரியாமல் லாரி ஒன்று காரின் மீது மோதியது. இதனைத் தொடர்ந்து 22 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.