ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வியடைந்தார் .
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் தருண்தீப் ராய், உக்ரைன் நாட்டை சேர்ந்த லெக்சீ ஹன்பின்-ஐ முதல் சுற்றில் எதிர்கொண்டார். இதில் 6-4 செட் பாயிண்டில் வெற்றி பெற்ற தருண்தீப் ராய் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த 2-வது சுற்றில் , இஸ்ரேல் நாட்டு வீரரான இட்டே ஷன்னியை எதிர்கொண்டர்.இதில் முதல் செட்டை 28-24 என இஸ்ரேல் வீரர் கைப்பற்ற, 2- வது செட்டை 27-26 என தருண்தீப் ராய் கைப்பற்றினார். இதையடுத்து 3-வது செட்டில் இருவரும் சமமாக புள்ளியை பெற்றிருந்தனர்.
இதன்பிறகு 4-வது செட்டை தருண்தீப் சாய் என கைப்பற்ற 5-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். ஆனால் 5 செட்களின் முடிவில் இருவரும் 5-5 என செட் பாயிண்ட்களை பெற்று சமமாக இருந்ததால் ஷூட்-ஆஃப் பாயிண்ட்முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் வீரர் அம்பை எய்து 10 புள்ளிகளை பெற்றார். ஆனால் தருண்தீப் சாய் 9 புள்ளிகளை பெற்றதால் 5-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.