மின்மாற்றி பழுது பார்க்கும் பணி நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆற்காடு பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் மின்மாற்றி பழுதடைந்துள்ளதால் அதனை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
இதனால் நகராட்சி பொறியாளர் சரவணபாபு இந்த பணி முடியும் வரை ஆற்காடு சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கு சில நாட்கள் குடிநீர் பிரச்சினை இருக்கும் மக்கள் அதை பொருதுக்கொள்ளுமாறு மவ்வட்ட நிவாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.