Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது…. ஓபிஎஸ் திட்டவட்டம்…!!!

தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் தொண்டர்களுடன் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் வருகின்றனர்.

சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால் சசிகலா அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இந்நிலையில் அ திமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது. நான்கு ஆண்டுகளாக நாங்கள் அதிமுகவை வழிநடத்தி வருகிறோம் என்று கூறினார்.

Categories

Tech |