நாமக்கல் மாவட்டத்தில் 2 வது கட்டமாக மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் 1 1/2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்களை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காவல்துறையினர் 2வது கட்டமாக பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து மோகனூர் பகுதியில் நடத்திய சோதனையில் சுமார் 1,400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதனை விற்பனை செய்த விஜயராகவன்(41), ரமேஷ்(31), காந்திலால்(35) அசோக்குமார்(22) உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பரமத்திவேலூர் பகுதியில் நடைதிய சோதனையில் 150 புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுபோல் பல்வேறு இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் 1 1/2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் 10 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.