நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த . இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் இந்த படம் ரிலீசாக உள்ளது .
இந்நிலையில் நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மயிலாப்பூரில் இருக்கும் தனியார் டப்பிங் ஸ்டுடியோவில் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.