பொதுமக்கள் வீதிகளில் கருப்பு கொடி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுடலை காலனி, சிவந்தா குளம், மற்றும் லோகியா நகர் போன்ற பகுதிகளில் பண்ணையார் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்த பண்ணையார் சமுதாயத்தை 2.5 சதவீதத்திற்கு தள்ளி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்தந்த வீதிகளில் கருப்புக் கொடிகளை கட்டியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கொடிகள் அனைத்தையும் அகற்றி விட்டனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஏன் இந்த கருப்புக் கொடிகள் அகற்றினீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.