நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் நாட்டை தாக்க கூடும் என எய்ம்ஸ் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். பல மாநிலங்கள் தளர்வுகள் திறக்க தொடங்கியதும், எல்லை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் பலர் கொரோனா விதிமுறைகளை மறந்துவிட்டனர். மக்கள் தங்கள் பாதுகாப்பை மறப்பது மூன்றாவது அலை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.