அகழாய்வு பணியின்போது தொல்லியல் துறை அதிகாரிகளால் பத்து அடுக்கு செங்கல் கட்டுமானம் மற்றும் திரவ பொருள் வடிகட்டும் குழாய் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல், சிவகளை, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் தற்போது அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றது. இதில் பண்டைய கால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதற்காக சால சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளது. ஆகவே இந்த அகழ்வாய்வு பணியின்போது பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய தாழிகள், மண்பாண்ட பொருட்கள், போன்றவற்றை தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் கொற்கையில் தொல்லியல் துறை அதிகாரிகளால் அகழாய்வு பணிக்காக 17 குழிகள் தோண்டப்பட்ட போது பழங்காலத்தில் சங்கு அறுக்கும் தொழிற்சாலை இருந்ததும், அங்கு 10 அடுக்கு செங்கல் கட்டுமானம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மற்றொரு குழியில் திரவ பொருட்களை வடி கட்டுவதற்காக பயன்படுத்திய 9 அடுக்குகள் உடைய வடிகுழாய் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் மற்றொரு குழியில் உடையாத மண்பானை, 3 சங்குகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகளும் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனால் அங்கு தொல்லியல் துறை அதிகாரிகள் தோண்டத் தோண்ட பொருட்கள் கிடைப்பதால் அதிக ஆர்வத்துடன் அகழாய்வு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.