ஹைதி நாட்டு அதிபரின் படுகொலையில் சம்பந்தப்பட்ட 24 பேரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கரீபியன் தீவிலுள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள செய்தியை அசோஸியேட் பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ” ஹைதி நாட்டு அதிபர் ஜோவெனால் மாய்சே படுகொலையில் ஜூன் லகுவேல் சிவிலுக்கு தொடர்பு இருப்பதாக கூறி தலைமை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான அவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு சிவில் தரப்பிலுள்ள வழக்கறிஞர் இதில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் உள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் ஹைதி அதிபர் படுகொலை சம்பவத்தில் கொலம்பியா முன்னாள் ராணுவ வீரர்கள் 15 பேர், இரு ஹைதி நாட்டு குடியுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், காவல்துறையினர், முன்னாள் அரசு அதிகாரிகள் என 24க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.