இந்த தேர்தல் மக்கள் செல்வாக்கு அதிமுகவுக்கு இருப்பதை நிரூபித்துக் காட்டும் என்று தமிழக முதலவர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் , அண்டை மாநிலத்துடன் நல்லுறவில் இருந்து வருகின்றோம். நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் உறுதி. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். ஆனால் மக்கள் நேர்மாறாக தீர்ப்பளித்தார்கள்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 சட்டமன்ற தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் பெற்றது.குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் 27, 000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றியின் வாக்கு வித்தியாசத்தில் இரண்டே மாதத்தில் மக்களுடைய மனநிலை எப்படி மாறி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்தல் மக்கள் செல்வாக்கு அதிமுகவுக்கு இருக்கின்றது என்பதை நிரூபித்துக் காட்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.