நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் ஓபிஎஸ் ஈபிஎஸ் தலைமையில் நேர்காணல் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து இன்று விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை முதல்வர் ஓபிஎஸ் முதல்வர் இபிஎஸ் அறிவித்தனர்.
அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட கானை ஒன்றிய செயலாளராக முத்தமிழ்ச் செல்வன் இருந்துள்ளார். நாங்குநேரி அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்துள்ளார்.
இதையடுத்து நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாங்குனேரிக்கு சென்னை, திருச்சி, கரூர், நெல்லை உள்ளிட்ட 27 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்ரவாண்டி தொகுதிக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 28 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.