Categories
மாநில செய்திகள்

”எல்லாம் அனுப்பியாச்சு” தேர்தல் அறிவிப்பு தான் பாக்கி…!!

உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை நவம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கக் கூடிய நிலையில் மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு நடத்தபடும்.அதேபோல் கிராம ஊராட்சிகளில் வாக்கு சீட்டு முறை பயன்படுத்தப்படும் என்று  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அந்த வகையில் மாநகராட்சி , பேரூராட்சி , நகராட்சி பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி  தொடங்கியுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய வாக்குப்பதிவு இருப்பு மையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த வாக்கு பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணியை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |