அக்னி சிறகுகள் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருண் விஜய் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் அக்னி சிறகுகள். இயக்குனர் நவீன் இயக்கியுள்ள இந்த படத்தில் அக்சரா ஹாசன், பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னி சிறகுகள் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை இயக்குனர் நவீன் பகிர்ந்துள்ளார்.
அதாவது ரஷ்யாவில் இந்த படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் விக்டர் என்பவர் தான் பயிற்சி கொடுத்துள்ளார். இதையடுத்து நடிகர் அருண் விஜய் தனக்கு தெரிந்த வித்தைகளை ஸ்டண்ட் மாஸ்டர் விக்டரிடம் செய்து காட்டியுள்ளார். அப்போது அந்தர் பல்டியடித்த அருண் விஜய்யை பார்த்து அசந்துபோன விக்டர், ‘உனக்கு ரிகர்சல் தேவையில்லை. நேரடியா ஷாட்டுக்கு போயிடலாம்’ எனக் கூறினாராம்.