Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குடிக்க கொஞ்சம் தண்ணீர் தாங்க…. நைசாக நுழைந்த தொழிலாளி…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

தொழிலாளி 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பி.டி.சி ரோடு பகுதியில் கட்டிட தொழிலாளியான பாபுல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாபுல் குடிபோதையில் ஒரு வீட்டில் தனியாக இருந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அந்த சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்ற போது தொழிலாளி அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அதன் பின் பாபுல் சிறுமியை அடித்து பாலியல் பலாத்காரம் செய்தததோடு, நடந்தவற்றை வெளியே சொல்ல கூடாது என அவரை மிரட்டியுள்ளார்.

ஆனால் அந்த சிறுமி சத்தம் போட்டதால் அங்கிருந்து பாபுல் தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாபுலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |