பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில் தத்துவவியல் மற்றும் பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்படுமென்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.