பிரான்ஸில் 11 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களில் எவரெல்லாம் கொரோனா குறித்த 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெறவில்லையோ அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் பயில வேண்டும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
பிரான்சில் 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த பள்ளி வளாகத்திற்குள்ளேயோ அல்லது அருகிலோ தடுப்பூசி போடுவதற்கான மையங்கள் திறக்கப்படும் என்று அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களில் கொரோனா குறித்த 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் தங்களுடைய கல்வியை பயின்று கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்த முடியாது என்பதால் அவர்களில் எவருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த வகுப்பு மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.