Categories
தேசிய செய்திகள்

BREAKING: மீண்டும் முழு ஊரடங்கு… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் அவசியம் என அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் பல இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தால், மீண்டும் கொரோனா பரவும் சூழ்நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளார். தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் ஒரு சில பகுதிகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |