துபாயில் அமைக்கப்பட்டிருக்கும் உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல்குளம் இன்றிலிருந்து மக்களுக்காக திறக்கப்பட்டிருக்கிறது.
துபாயில் இருக்கும் நாத் அல் செபா என்ற பகுதிக்கு அருகில் டீப் டைவ் நிறுவனம் உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை அமைத்திருக்கிறது. இது மொத்தமாக 197 அடி ஆழமும் ஒரு கோடியே 40 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீரும் கொண்டுள்ளது. அதாவது ஏறக்குறைய 6 ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவை கொண்டிருக்கிறது.
இதில் ஹைபர் பேரிக் என்ற பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு நகர் நீருக்குள் மூழ்கி போனது போன்ற தோற்றத்தில் இருக்கும். இதுமட்டுமல்லாமல் கார் போன்ற வாகனங்கள் போன்ற அமைப்புகள் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. மேலும் நீருக்கு அடிப்பகுதியில் 56 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கிறது.
மேலும், ஆழம் நிறைந்த பகுதிகளில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு நிறங்களும் ஒளி அளவையும் வெளிப்படுத்தும் வகையில் 164 மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒரே சமயத்தில் இந்த நீச்சல் குளத்தில் 100 நபர்கள் பங்கேற்று நிகழ்ச்சிகள் நடத்தலாம். தற்போது இந்த நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டிருக்கிறது.