Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வாழ்க்கையே வெறுத்துப் போச்சு” தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தாய்-மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் கீதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் தாமு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு சிவரஞ்சினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கணவர் இறந்த நிலையில் கீதா தனது மகளுடன் வாடகை வீட்டில் கும்மிடிப்பூண்டியில் தனியாக வசித்துள்ளார்.

இதனையடுத்து பல்வேறு பிரச்சினைகளால் மன உளைச்சலில் இருந்த கீதா தனது மகளுடன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதன்பின் கீதாவை பார்க்க வந்த அவரது சகோதரி ராஜு கதவை நீண்டநேரமாக தட்டியுள்ளார். ஆனால் கீதா கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்த ராஜு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது தாய், மகள் இருவரும் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கிடந்ததை பார்த்து ராஜு கதறி அழுதுள்ளார்.இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |