Categories
தேசிய செய்திகள்

பெண்ணை வன்கொடுமை செய்து மனைவியாக்கிய நபர்.. குகைக்குள் அழைத்து சென்று கொன்ற கொடூரம்..!!

டெல்லியில் நபர் ஒருவர், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்த பின், கொலை செய்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

டெல்லியில் வசிக்கும் ராஜேஷ் என்ற நபர் பபிதா என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். எனவே அந்தப் பெண் காவல்துறையினரிடம் கடந்தவருடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பின்பு, ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து பிரமாண பத்திரத்தில், ராஜேஷ், பபிதாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

எனவே அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். அதன் பின்பு கடந்த வருட இறுதியில் அவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி அன்று பபிதா மாயமானதாக அவரது குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பபிதாவுடன் ராஜேஷ் தான் கடைசியாக தொலைபேசியில் பேசியிருக்கிறார். அதன் பின்பு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மனைவியை கொன்றதை ஒத்துக்கொண்டார். அதன்பின்பு பபிதாவின் சடலம் கைப்பற்றப்பட்டது. ராஜேஷ் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, “என் மனைவி மற்றும் மாமியார் இருவரும் என்னை கொடுமைப்படுத்தினர்.

எனவே பபிதாவை கொலை செய்ய முடிவெடுத்தேன். இதனால் தொலைபேசியில் அவரை ஒரு இடத்திற்கு வருமாறு கூறினேன். அவர் வந்ததும் குகைக்குள் அழைத்துச் சென்று, அவருடன் தனிமையில் இருந்துவிட்டு கழுத்தை நெரித்து கொன்றதாக கூறியிருக்கிறார். தற்போது ராஜேஷ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |