ரஸ்சியாவில் மலையேற்றத்திற்கு சென்ற நண்பர்களில் ஒருவரை கரடி கொன்று தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் 4 நண்பர்கள் சேர்ந்து மலையேற்றத்திற்காக சென்றுள்ளார்கள். அப்போது சைபீரியாவில் இருக்கும் ஒரு இடத்தில் முகாமிட்டனர். அங்கு தங்கிய அவர்கள் Yergaki Nature Park-லிருந்து புறப்பட்டனர். அந்த சமயத்தில் திடீரென்று ஒரு கரடி அவர்கள் அருகே வந்துவிட்டது.
எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் பதறியடித்துக்கொண்டு ஒடியுள்ளனர். அதில், Yevgeny Starkov என்ற 42 வயது நபர் மட்டும் கரடியிடம் மாட்டிக்கொண்டார். மீதமுள்ள மூவரும் உயரமான மலைப்பகுதியில் ஏறிவிட்டார்கள். அவர்கள், கண்முன்பே, Starkovவை கரடி கடித்து தின்றுள்ளது. தங்கள் நண்பரை கரடி தின்றுகொண்டிருப்பதை பார்த்த மூவரும் அதிர்ந்துபோனார்கள்.
அதன் பின்பு, மீதமுள்ள 3 பேர் மட்டும் சுமார் 7 மணி நேரங்களாக நடந்து சென்றே பத்திரமான இடத்திற்கு சென்றுள்ளனர். அதனையடுத்து அவர்கள் உதவிக்கேட்டுள்ளார்கள். எனினும் வானிலை மோசமாக இருந்துள்ளது. இதனால் மீட்புக் குழுவினர், ஹெலிகொப்டரில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் போனது.