அரசு ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் மைக்கேல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மைக்கேல் குமார் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து மைக்கேல் குமார் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 பவுன் தங்க நகை போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மைக்கேல் குமார் கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.