குடியிருப்பு பகுதிக்குள் கரடி சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் அந்த ஊரில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்குள் அதிகாலை நேரத்தில் கரடி நுழைந்து விட்டது. இதனையடுத்து கரடி பூஜை பொருட்களை அங்குமிங்கும் வீசிவிட்டு எண்ணையை குடித்து விட்டு சென்றுள்ளது.
இதனை தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் கரடி சுற்றி வந்ததை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். எனவே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.