நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஆராய்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று ஒன்றிய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால் விரைவில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.