Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்

ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1/2 கப்

மைசூர் பருப்பு – 1/2 கப்

பாசிப்பருப்பு – 1/2 கப்

சின்ன வெங்காயம் –  12

முருங்கைக்காய் – 2

புளிச்சாறு – 4 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சர்க்கரை – 1 டீஸ்பூன்

சாம்பார் பொடி – 7 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு:

கடுகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

Iyengar style drumstick  sambar க்கான பட முடிவு

செய்முறை:

முதலில்  பருப்புகள் அனைத்தையும்  ஒன்றாக சேர்த்து  நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் சின்ன வெங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைக்கவும். பருப்பு  வெந்ததும்,  புளிச்சாறு,  முருங்கைக்காய், உப்பு, சர்க்கரை, சாம்பார் பொடி சேர்த்து  நன்கு கொதிக்க வைக்கவும். பின் கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து கிளறி இறக்கினால், ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் ரெடி!!!

Categories

Tech |