80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சிறிது காலத்தில் புகழின் உயரத்திற்கு சென்றார். கடைசியாக 1994ஆம் ஆண்டு தமிழ் படம் ஒன்றில் நடித்தார். அதன்பிறகு சினிமாவின் பக்கம் வரவில்லை. பின்னர் மீண்டும் 2004ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் இவர் நடித்து வருகிறார்.
தற்போது வரை இளமை குறையாமல் மிகவும் பிட்டாக இருக்கும் அவரை ரசிகர்கள் எப்போதும் ஆச்சரியமாகத்தான் பார்ப்பார்கள். தன் இந்த வயதிலும் மகிழ்ச்சியாக, பிட்டாக இருப்பதற்கு காரணம் தொடர்ந்து உடற்பயிற்சி, யோகா செய்வது என நடிகை நதியா பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 54 வயதாகும் அவர் தற்போது பிட்னஸ் தொடர்பாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் வழக்கமாக உடற்பயிற்சி செய்வது உடல், மனம், ஆன்மாவிற்கு தரும் கௌரவம் என குறிப்பிட்டுள்ளார்.