ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளியை தாக்கிய 2 பேரை கைது செய்த நிலையில் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள பெரியகுளம் பகுதியில் கணேசமூர்த்தி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்ணை காதலித்து கர்பமாக்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனையடுத்து கணேசமூர்த்தி வெளியே சுற்றி திரிந்ததை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மகேஷ் குமார்(22), கார்த்திகேய சேதுபதி(32) பழனிநாதன், ஜெகநாதன், மகேஷ் ஆகியோர் இணைந்து கணேசமூர்த்தியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து கினெசமுர்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் கடலாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மகேஷ்குமார் மற்றும் கார்த்திகேய சேதுபதி ஆகிய 2 பேரை கைது செய்த நிலையில் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.