போலியாக மருத்துவம் பார்த்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஒரு பெண் சிகிச்சை அளிப்பதாக சுகாதார துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மருத்துவ அலுவலர், செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மருத்துவ படிப்பு படிக்காமல் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்த ரேணுகா என்பவரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போலி மருத்துவரான ரேணுகா என்பவரை கைது செய்துள்ளனர். அதன்பிறகு மருத்துவப் படிப்பு படிக்காமல் போலி மருத்துவர்களை சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களின் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.