பிரித்தானியாவில் இரண்டு மாத குழந்தை பெண் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் வடக்கு பெல்பாஸ்ட் பகுதியில் Ardoyne எனுமிடத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு 8 மணி அளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு இரண்டு மாத பச்சிளம் குழந்தை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
https://twitter.com/i/status/1420124107065200641
மேலும் அந்த குழந்தையின் அருகில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அந்த குழந்தையையும், பலத்த காயங்களுடன் கிடந்த அவரது தாயையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.