ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். மேற்கு வங்கத்தின் முதல்வராக இரண்டாவது முறை பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக மம்தா பானர்ஜி சோனியா காந்தியை சந்திக்கிறார். இதில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக கிளம்பியுள்ள பெகாசஸ் உள விவகாரத்தை பற்றியும் இதில் விவாதித்து இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
Categories