தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாடு முழுவதும் சேல்ஸ் மேன்,பேக்கிங் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசின் சார்பில் இயங்கும் நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.