செல்வமகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால்துறை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் பெயரில் அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் கணக்கை திறக்க முடியும். இதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கான இரண்டு கணக்குகளை திறக்க முடியும்.
பயன்கள்:
இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்து வந்தால் வருடத்திற்கு 7.6 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. சிறுசேமிப்புத் இடங்களிலேயே செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு தான் அதிக வட்டி கிடைக்கிறது. எனவே இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெண்ணிற்கு 24 வயது ஆகும்போதோ அல்லது திருமணத்தின் போதோ அந்த கணக்கில் உள்ள மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம். முதலில் 250 ரூபாய் பணத்தை எடுத்தால் போதும்.
கணக்கு தொடங்குவது எப்படி?
இதில் பெண் குழந்தைகளைச் சேர்க்க அவர்களுடைய பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை வயதுச் சான்று ஆவணமாக கொடுக்கலாம். உங்கள் பக்கத்திலுள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
லாபம் எவ்வளவு?
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 சேமித்து வந்தால் கடைசியில் மொத்தம் ரூ.1.80 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். மேலும் அதற்கு வட்டியாக ரூ.3.29 லட்சம் கிடைக்கும். கடைசியாக மொத்தமாகப் பார்த்தால் ரூ.5.09 லட்சம் லாபம் கிடைக்கும்.