அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள வணங்காமுடி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்காமுடி. செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
Aravindsamy starrer #Vanangamudi Teaser from August 3rd on YouTube from Sony Music! Directed by Selva! #DImmanMusical Praise God! pic.twitter.com/kjDahc3Byk
— D.IMMAN (@immancomposer) July 28, 2021
கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதையடுத்து இந்த படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை . இந்நிலையில் வணங்காமுடி படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது .