Categories
மாநில செய்திகள்

கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன்… டிடிவி தினகரன்… ஜெயக்குமார் கடும் விமர்சனம்…!!!

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இந்நாள்வரை செயல்படுத்தவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை. வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

மேலும் டிடிவி தினகரன் அதிமுகவை மீட்டெடுப்பதற்கான பணிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து செய்யும் என்று கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது டிடிவி தினகரனும், சசிகலாவும் அதிமுகவிற்கு தொடர்பு இல்லாதவர்கள். கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவதெல்லாம் நடக்காது என்று டிடிவி தினகரனை அவர் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |