Categories
உலக செய்திகள்

“என்னது இது!”.. இரண்டு தலைகளுடன் வெளிவந்த ஆமை.. வைரலாகும் புகைப்படம்..!!

அமெரிக்க நாட்டில் இரண்டு தலைகளுடன் ஒரு ஆமைக்குஞ்சு பொரித்த புகைப்படம்  இணையதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா கடற்கரைப் பகுதியில் இருக்கும் எடிஸ்டோ பீச் ஸ்டேட் என்ற பூங்காவில் மணலில் தான் வழக்கமாக கடல் ஆமைகள் முட்டையிடும். அதில் சில முட்டைகள் மண்ணுக்குள் புதைந்து விடும். எனவே அந்த பூங்காவில் சோதனை பணியில் இருக்கும் படை வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அதனை சோதனை செய்வார்கள்.

அப்போது, பொரிக்காத 3 முட்டைகள் கிடந்திருக்கிறது. அதன் பின்பு சிறிது நேரம் கழித்து அவை தானாகவே குஞ்சு பொரித்திருக்கிறது. அதில் ஒரு முட்டையிலிருந்து ஆமை குஞ்சு வெளிவந்தபோது அதற்கு இரட்டை தலை இருந்தது. எனவே பூங்காவின் பணியாளர்கள் அதனை புகைப்படம் எடுத்து இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |