தனிப்பிரிவு போலீசார் 9 பேரை பணி இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்ட் ஓம்பிரகாஷ் மீனா தனிப் பிரிவு போலீசாரை பணி இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட தனிப்பிரிவு ஏட்டாக ரத்தினகிரி வினோத்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிப்காட் தனிப்பிரிவு போலீசாக ராணிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் குமரேசனும், ஆற்காடு தாலுகா தனிப்பிரிவு ஏட்டாக, ஆற்காடு தனிப்பிரிவு டவுன் சுப்ரமணியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து ரத்னகிரி தனிப் பிரிவுக்கு ராணிப்பேட்டை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாபுவும், அரக்கோணம் டவுன் தனிப்பிரிவுக்கு அரக்கோணம் தாலுகா தனிப்பிரிவு போலீஸ் சிவகுமாரும், அரக்கோணம் தாலுகா தனிப்பிரிவு ஏட்டாக அரக்கோணம் தாலுகா ஏட்டு மகேஷ்யும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.