குடி குடியை கெடுக்கும், மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்ற வாசகம் மதுபாட்டில்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும் மது போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். மதுபோதை தனிமனிதனை மட்டுமல்லாமல் சமுதாயத்தையும் பாதிப்படைய செய்கிறது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இதை நிரூபிக்கும் விதமாக மது போதையில் பெண் ஒருவர் ரோட்டில் ஆட்டம் போடும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசத்தில் போதையில் இருந்த பெண் ஒருவர் சாலை நடுவே சென்று வண்டியில் செல்பவர்களை வம்பிழுத்து ஆட்டம் போட்டுள்ளார். பலமணிநேரம் இந்த பெண் அவ்வாறு செய்துள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது .அந்த சமயத்தில் திடீரென்று மழை பொழிவு ஏற்படும் அவருடைய போதை இறங்காததால் ஆட்டம் போட தொடங்கியுள்ளார். கடைசியில் போதை தெளிந்ததும் அந்தப் பெண் தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகியதையடுத்து நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர்.
#WATCH | Drunk woman creates ruckus in Damoh, halts traffic for hours pic.twitter.com/Nhc2f1qPdI
— The Times Of India (@timesofindia) July 28, 2021