நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறாத ஒரு பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்பிலிக்ஸில் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, அஸ்வந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
Happy Birthday @dhanushkraja 🎉🎉
Here's one small treat for D fans from team #JagameThandhiram https://t.co/zQw8O6VZ6A
— karthik subbaraj (@karthiksubbaraj) July 28, 2021
ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று (ஜூலை 28) தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறாத ‘ஆல ஓல’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.