Categories
தேசிய செய்திகள்

மக்களே! மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க…. இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையையாளர்களுக்கு எக்கச்சக்க சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், எஸ்பிஐ பண மோசடியிலிருந்த்து தப்பிக்க சில வழிகளை கூறியுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக வலைதளங்களில் தனிநபர் விவரங்களை பகிர்ந்துகொள்ளக்கூடாது.

யார் என்னவென்று தெரியாமல் யாருக்கும் பணத்தை அனுப்பக்கூடாது. சொந்த விவரங்கள் அடங்கிய கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் அல்லது ஆவணத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடாது. சந்தேகத்துக்குரிய இமெயில் வந்தால் அதில் உள்ள linkஐ கிளிக் செய்யாமல் தவிர்த்துவிட வேண்டும். டெபிட் கார்டு விவரங்கள், நெட் பேங்கிங் விவரங்கள் போன்றவற்றை யாரிடமும் பகிரக்கூடாது. ஆசை வார்த்தை கூறி ஏமாற்றும் போலி மெசேஜ்கள், தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

Categories

Tech |