Categories
தேசிய செய்திகள்

இனி கவலையே வேண்டாம்…. சிலிண்டர் வர லேட்டே ஆகாது…. இதை மட்டும் செய்தால் போதும்…!!!

பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ்  இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிலிண்டர் முடிந்தவுடன் மக்கள் புக் செய்தால் ஒரு சில டீலர்களிடமிருந்து சிலிண்டர் வருவதற்கு வாரக்கணக்கில் ஆகிவிடுகின்றது. இதனால் அந்த சமயங்களில் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் இந்த பிரச்சினையை போக்குவதற்காக தற்போது புதிய வசதி ஒன்று மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதாவது முன்பு போல ஒரு விநியோகஸ்தர்களிடம் மட்டுமே சிலிண்டர்களை நிரப்பாமல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் மூன்று விநியோகஸ்தர்களிடம் இருந்து மக்கள் சிலிண்டர் நிரப்பிக்கொள்ளலாம் என்றும், ஒரு நிறுவனத்தில் சிலிண்டரை முன்பதிவு செய்து அது உடனே வராமல் இருந்தால் வாடிக்கையாளர்கள் வேறொரு நிறுவனத்தில் சிலிண்டர் முன்பதிவு செய்து வாங்கலாம். எந்த சிலிண்டர் முதலில் வருகிறதோ அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.

இதற்கான சிலிண்டரை புக்கிங் செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வெப் போர்ட்டல் அல்லது மொபைல் ஆப் மூலமாக புக்கிங் செய்யலாம்.

இண்டேன் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள்: https://cx.indianoil.in அல்லது IndianOil One மொபைல் ஆப்.

பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள்: https://my.ebharatgas.com அல்லது Hello BPCL .

ஹெச்.பி. கேஸ் வாடிக்கையாளர்கள்: https://myhpgas.in அல்லது HP pay .

Categories

Tech |