விருச்சிகம் ராசி அன்பர்களே.! தடைகளை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்ல முடியும்.
இன்று சிலர் சொல்லக் கூடிய அறிவுரைகள் உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கி கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். செலவுகளுக்கான பணம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மகிழ்ச்சி இருக்கும். செயலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச் செல்லும். தடைகளை உடைத்தெறிந்து வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடியும். எதிர்பார்த்த உதவிகளும் கண்டிப்பாக கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் என்று அனைவரும் உதவிகரமாக இருப்பீர்கள். உறவினரின் வருகை இருக்கின்றது. குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது பார்த்து பக்குவமாகப் பேச வேண்டும். வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
பிரச்சனையை கண்டு பயப்படாமல் அதனை எதிர்த்து நின்று செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கின்றது. காதல் சிரமத்தை கொடுக்காது. மனதிற்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கவலைப்படாமல் இருக்க வேண்டும். இன்று மாணவர்களுக்கு தெளிவான சிந்தனையும் கல்வியில் சாதிக்க கூடிய அமைப்பும் எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையில் முன்னேற கூடிய சூழலும் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்