Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? மளமளவென பற்றி எரிந்த தீ…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைத்து விட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராமையன்பட்டியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. அதன்பிறகு காற்றின் வேகத்தால் குப்பை கிடங்கில் பற்றிய தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி விட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். அதன்பிறகு விடிய விடிய நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீயிலிருந்து வரும் புகையால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே தீ விபத்து ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Categories

Tech |