Categories
உலக செய்திகள்

அதிசயம் ஆனால் உண்மை… இந்த நாட்டு கடிகாரத்தில் “11 மணி வரை” மட்டும்தான் இருக்கும்… சுவாரஸ்யமான தகவல்…!!!

கடிகாரத்தில் எப்போதும் 12 எண்கள் இருப்பது சாதாரணம். ஆனால் இந்த கடிகாரத்தில் மட்டும் 11 வரை மட்டுமே இருக்கும். இந்த கடிதத்திற்கு மட்டும் என்ன ஸ்பெஷல் என்பதை பார்க்கலாம்.

உலகில் பல மொழி, கலாச்சாரம், பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும், காலம் என்பது உலகிற்கு பொதுவாக உள்ளது. நாள், கிழமை, நேரம் எல்லாம் உலகிற்கு ஒரேமாதிரியாக கணக்கிடப்பட்டது. ஒவ்வொரு நாட்டிற்கு நேரம் மட்டுமே மாறும். அதுதவிர கணக்கிடும் முறை முறையில் மாற்றம் எதுவும் இருக்காது. ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது உலகம் முழுவதும் பொதுவான விஷயம். உலகம் முழுவதும் உள்ள கடிகாரத்தில் 1 முதல் 12 எண்கள் இருக்கும். இரண்டு முட்கள் இருக்கும். நாம் அனைவரும் தற்போது நேரம் என்ன ஆகிறது என்பதை கணிக்க முடியும்.

ஆனால் இந்த ஒரு இடத்திற்கு மட்டும் பன்னிரண்டாவது எண் இருக்காது. அதற்கு பதிலாக 1 முதல் 11 வரை மட்டுமே இருக்கும். சுவிட்சர்லாந்து நாட்டின் ஸோலோத்ருன் என்ற பகுதியில் ஒரு மணிக்கூண்டு உள்ளது. அந்த மணி கூண்டில் 1 முதல் 11 வரையிலான எண்கள் மட்டுமே உள்ளன. அதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டு மக்கள் 11 என்ற எண்ணின் மீது கொண்ட காதல். மேலும் 11 என்றால் அவர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாம்.

அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தேவாலயங்களின் எண்ணிக்கை 11, அங்குள்ள அருங்காட்சியகம் வரலாறு சிறப்புமிக்க இடங்களின் எண்ணிக்கை 11, அதுபோக செயின்ட் உருஸ் தேவாலயத்தில் 11 படிக்கட்டுகள், 11 கதவுகள், 11 மணிகள் உள்ளனவாம். மேலும் அங்குள்ள மக்கள் தங்களது 11 ஆவது பிறந்த நாளை மட்டும் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். 11 என்ற எண்ணின் மீது மக்கள் இவ்வளவு ஆழ்ந்த அன்பு கொண்டிருக்க காரணம் என்னவென்றால் ஒரு காலத்தில் அந்த பகுதி மக்கள் கடுமையாக உழைத்தார்கள்.

ஆனாலும் அவர்களது வாழ்வில் சந்தோஷம் இல்லாமல் இருந்ததால் அப்போது அப்பகுதியில் தோன்றிய தேவதை ஒன்று ஆங்கிலத்தில் elf என்று குறிப்பிட்டார்கள். அதற்கு அர்த்தம் என்ன என்றால் பதினொன்றாம்.மேலும் அந்த நிகழ்விற்கு பிறகு அந்நாட்டு மக்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். இதனால் 11 மீது அந்த மக்கள் அவ்வளவு காதல் கொண்டுள்ளனர்.

Categories

Tech |