காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு போக்குவரத்து , மோட்டார் வாகன , சாலை பாதுகாப்பு புதிய மசோதாவை நடைமுறைப் படுத்தி இருக்கிறார்கள்.இதனால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சாலை விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கக் கூடிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்கிறது.மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அதற்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையை தான் தற்போது ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க கூடிய நபர் அவருடைய ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகிவிட்டால் அதை புதுப்பிப்பதற்காக ஐந்து ஆண்டுகள் அவகாசம் இருந்தது , தற்போது இது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு மசோதாவுக்கு பிறகு இந்த நடைமுறை தற்போது தமிழகத்திலும் வந்திருக்கிறது. இதேபோன்று பிற மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.தமிழகத்தைப் பொருத்தவரை தற்போது இந்த மாதத்தில் இருந்தே இந்த நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது. ஒரு நபர் ஓட்டுநர் உரிமம் பெற்றால் அதற்கான கால அவகாசம் 20 ஆண்டுகள். பின்னர் 5 ஆண்டுகளுக்குள் அதை புதுப்பித்துக் கொள்ளலாம். இனிமேல் காலாவதி ஆகி 1 ஆண்டுக்குள் புதுப்பிக்க வேண்டும் இல்லையென்றால் மீண்டும் புதிய ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.